சுடச்சுட

  

  இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாசா விருப்பம்: இஸ்ரோ விஞ்ஞானி பி. ரமேஷ் நாராயணன்

  By DN  |   Published on : 01st October 2014 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மங்கள்யான் வெற்றி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்தியுள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்தியாவுடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது என திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி பி. ரமேஷ் நாராயணணன் தெரிவித்தார்.

  சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொறியாளர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பேசிதாவது:

  உலகத்தரம் வாய்ந்த பொறியாளர்களாக உருவாக கல்வியறிவு, உலக அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும். மங்கள்யானின் வெற்றி, உலக நாடுகளையெல்லாம் இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தது. தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மற்றும் பிற நாடுகள்  இந்தியாவுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட தானாகவே முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளது. இது நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். இதனால் விண்வெளித் துறையில் உலகத் தர வரிசையில், இந்தியா 6ஆவது இடத்தில் இருந்து 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என தெரிவித்தார்.

  விழாவுக்கு தலைமை வகித்த வின்ஸ் கல்லூரிகளின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரிச்  செயலர் கிளாரிசா வின்சென்ட் வாழ்த்திப் பேசினார்.

  விழாவில் பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவியர் 46 பேர்  ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அதில், சிறப்பிடம் பிடித்த மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கல்லூரி நிறுவனர் வழங்கினார்.

  முன்னதாக நல்லாசிரியர் விருது பெற்ற, குமரி மாவட்ட ஆசிரியர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai