சுடச்சுட

    

    பளுகல் அருகே வாய்க்காலில் தலைகீழாக கவிந்த மணல் லாரியை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டு, பறிமுதல் செய்தனர்.

    மத்தம்பாலை பாய்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வந்த மணல் லாரி சகதியில் புதைந்து அருகிலுள்ள வாய்க்காலில் தலைகீழாக கவிழ்ந்தது. சப்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்தபோது மணல் லாரி கவிழ்ந்து கிடந்தது கண்டு, போலீஸாருக்குத்  தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை மீட்டு, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், லாரியில் மணல் பதுக்கி வைத்து கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து, பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai