Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    குலசேகரம் அருகேயுள்ள மாமூடு, பொன்னாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் சிங். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா (40). இவர், செவ்வாய்க்கிழமை வீட்டருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தாராம்.

    இதையடுத்து, அப்பகுதியினர் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் வீரர்கள் வந்து கிணற்றில் தவித்த பெண்ணை மீட்டனர்.

    உணவகத்தில் தீ விபத்து:  குலசேகரம் அருகே ஹோட்டலில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. குலசேகரம் சந்தை சந்திப்பில் கிருஷ்ணன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ஊழியர்கள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ பரவியது. தகவலறிந்த  குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai