சுடச்சுட

  

  கன்னியாகுமரி, செப். 30: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் செவ்வாய்க்கிழமை நகரின் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

   அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நாள் தொடங்கி தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக கர்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்கள் வருவது முற்றிலும் தடைபட்டுள்ளன. இதன் காரணமாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.  தங்கும் விடுதிகளில் அறைகளுக்காக முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ரத்து செய்து விட்டதால் தங்கும் விடுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி லேசான சாரல் மழை பெய்தது. நகரின் முக்கிய பகுதிகளான சன்னிதி தெரு, திரிவேணி சங்கமம், காந்தி மண்டப சாலை, பூம்புகார் படகுத்துறை, பேரூராட்சி பூங்கா, சூரிய அஸ்தமன பூங்கா உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai