சுடச்சுட

    

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அமையவிருக்கும் இடத்தில் செவ்வாய்க்கிழமை பிரமோத்ஸவ கருட சேவை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் ரூ. 22 கோடியே 50 லட்சம் செலவில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் திருப்பதியில் நடப்பதைப் போன்று பூஜைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் பிரமோத்சவ விழா கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5ஆம் நாள் விழாவான செவ்வாய்க்கிழமை பிரமோத்ஸவ கருட சேவை நடைபெற்றது. இதேபோல், கன்னியாகுமரியில் கோயில் கருவறை அமையவிருக்கும் இடத்தில் மாலை அணிவிக்கப்பட்டு, பழங்கள் படையல் செய்து பிரமோத்ஸவ கருட சேவை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் கட்டுமான திட்ட பொறியாளர்கள் பாலகிருஷ்ணன், விஜயகுமார், வழக்குரைஞர் பார்த்தசாரதி, சிவன்பிள்ளை மற்றும் உள்ளூர் பக்தர்கள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai