Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைக் கண்டித்து, குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.

    நாகர்கோவில் நகர அதிமுக சார்பில் வடசேரியில் நடைபெற்ற உண்ணாவிரதப்  போராட்டத்துக்கு நகரச் செயலர் சந்திரன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட துணைச் செயலர் ராஜன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன், இளைஞர் பாசறை செயலர்  ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலர் ராஜேஷ், நகராட்சி உறுப்பினர்கள் சீனு, செல்லத்தாய், சகாயராஜ், ஸ்ரீமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பங்கேற்ற அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

    தோவாளை ஒன்றியம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒன்றியச்  செயலர் கே.சி.யூ. மணி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதேபோல் திங்கள்நகர், கிள்ளியூர், முஞ்சிறை உள்ளிட்ட 12 இடங்களில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.மேலும், குமரி மாவட்டத்தில் திரையரங்கள் மூடப்பட்டன. ஜெயலலிதா விடுதலையாக வேண்டி ஜெயலலிதா பேரவை சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் சேவியர் மனோகரன் தலைமை வகித்தார். நாகராஜா கோயிலில் பால் ஊற்றியும், வடசேரி யாகப்பர் ஆலயத்தில் மெழுகுவரத்தி ஏற்றியும், வடசேரி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

    தக்கலை:  எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பத்மநாபபுரம் நகரச் செயலர் ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். இதில், ஒன்றியச்  செயலர் மத்தியாஸ், பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவி எஸ்.ஆர். சத்யாதேவி, குமாரபுரம் பேரூராட்சித் தலைவர் அனிதா ஜெங்கின்ஸ், மகளிரணி மாவட்டச் செயலர் ஹெப்சிபாய், சிறுபான்மை பிரிவுச் செயலர் மாஹின், வழக்குரைஞர் பிரிவு  இணைச் செயலர் சௌந்தர்ராஜ், நகர்மன்ற துணைத் தலைவர் பீர்முகம்மது, உறுப்பினர்கள் மணிகண்டன், பாரூக், நிர்வாகிகள், ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

    கருங்கல்:  கிள்ளியூர் ஒன்றியம் சார்பில், கருங்கல் ஆட்டோ நிலையம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஜார்ஜ் தலைமை வகித்தார். இளைஞரணிச்  செயலர் மார்ட்டின் ஜோஸ் முன்னிலை வகித்தார்.

    மேற்கு மாவட்டத் தலைவர் ஜெங்கின்ஸ், மாவட்ட அவைத் தலைவர் குற்றாலிங்கம், மாவட்ட இணைச் செயலர் சலாம், கிள்ளியூர் தொகுதி இணைச் செயலர் மரியதாஸ், ஒன்றிய அவைத் தலைவர் வில்பிரட் டேனியல், இளைஞர் பாசறை மாவட்டச் செயலர் ஸ்ரீமகேஷ், இணைச் செயலர் மோகன்தாஸ், சந்திரசேகர்,வின்சென்ட், பர்வீன்குமார், சகாயசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்சிறை ஒன்றியம் சார்பில், புதுக்கடையில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு முன்சிறை ஒன்றியச் செயலர் மைதீன் தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவைத்  தலைவர் ஜீன்ஸ், பேரூர் செயலர் வெற்றிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், கிள்ளியூர் தொகுதி இணைச் செயலர் மோகன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் ஸ்டீபன், மாவட்ட பிரதிநிதி நடராஜன், கவுன்சிலர் கனகராஜ், தூத்தூர் ஊராட்சித்  தலைவர் ஜான் அலோசியஸ், ஏழுதேசம் பேரூர் செயலர் கிருஷ்ணராஜ், கொல்லங்கோடு பேரூர் செயலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    களியக்காவிளை:  மேல்புறம் ஒன்றிய அதிமுக சார்பில் களியக்காவிளை சந்திப்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மேல்புறம் ஒன்றியச் செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். விளவங்கோடு தொகுதிச் செயலர் கே.ஜி. உதயகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் மேற்கு மாவட்ட முன்னாள் செயலர் டி. ஜான்தங்கம், களியக்காவிளை பேரூர் செயலர் ஜி. அருள்ராஜ், துணைச் செயலர் அபுபக்கர், பேரூர் அவைத் தலைவர் ராபர்ட் வில்சன், மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் இஸ்மாயில், துணைச் செயலர் ஆல்பர்ட்சிங், வன்னியூர் கிளைச் செயலர் டேனியல் டி. சில்வா, வன்னியூர் ஊராட்சித் தலைவர் ஆர். வன்னியூர் பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் வி. நசீர், மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவர் எப். பிராங்கிளின், மாவட்ட இளைஞர் பாசறை செயலர் ஷைன்ஜோஸ் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    மார்த்தாண்டம்:  காந்தி மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் குழித்துறை நகரச் செயலர் ராஜன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கே.ஏ. சலாம், நாஞ்சில், மாவட்டப் பொருளாளர் நாஞ்சில் டொமினிக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    குலசேகரம்: திருவட்டாறு ஒன்றிய அதிமுக சார்பில் குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கட்சியின் திருவட்டாறு ஒன்றியச் செயலர் சுதர்சன் தலைமை வகித்தார். கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ், கட்சி நிர்வாகிகள் முருகன், பி.டி. செல்லப்பன், மனோகரன், ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai