Enable Javscript for better performance
திரிவேணி சங்கமத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி பேரூர் அதிமுகவினர் திரிவேணி சங்கமம் பகுதியில் கடலுக்குள் இறங்கி செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி பேரூர் அதிமுக செயலர் பி. வின்ஸ்டன் தலைமையில், சர்ச் ரோடு சந்திப்பில் இருந்து ஊர்வலமாக வந்த அதிமுகவினர், திரிவேணி சங்கமத்தில் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில், முன்னாள் ஒன்றியச் செயலர் டி. அரிகிருஷ்ணபெருமாள், பேரூர் ஜெயலலிதா பேரவைச் செயலர் பி. ஆனந்த், பேரூர் இளைஞரணிச் செயலர் ரெயான்ஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ். பீட்டர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றியச் செயலர் பா. தம்பித்தங்கம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒன்றிய துணைச் செயலர் இ. முத்துசாமி, ஊராட்சித் தலைவி சாந்தி இசக்கிமுத்து, அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், ஒன்றிய மீனவரணிச் செயலர் கே. லீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாணவர்கள் போராட்டம்: கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் படித்து வரும் இக்கல்லூரி அமையக் காரணமாக இருந்த ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai