சுடச்சுட

    

    நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By DN  |   Published on : 01st October 2014 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி நியமன நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்றக் கோரி நாகர்கோவிலில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலர் கனகராஜ், தொழிற்சங்க கூட்டுக் குழுத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் வாழ்த்துரை வழங்கினார்.

    ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு அமைப்பாளர் ஜெரோம் போராட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். நிர்வாகிகள் முரளிதரன், சுரேஷ்குமார், அருள்தாஸ், சுனில் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பணிநியமன நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்றக்கோரி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai