சுடச்சுட

    

    பத்மநாபபுரத்தில் சீரான குடிநீர் வழங்கக் கோரி நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

    By DN  |   Published on : 01st October 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்மநாபபுரம் நகராட்சியில் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படவில்லை, வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறவில்லை, சுகாதாரம் சரிவர பேணப்படவில்லை, நகர்மன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை எனக் கூறி நகராட்சி அலுவலகம் முன், 15 நகர்மன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி பத்மநாபபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள் (வார்டு வாரியாக)  ஜானி (1), நாகராஜன் (2), ஹரிகுமார் (3), ராஜா (5), செந்தில்குமார் (7), ஷீஜா ராணி (8), செய்யதலி (10), உவேஷ் (12), ஸ்ரீகலா (13), விஜிலா (14), ஸ்ரீகுமார் (15), ரங்கசாமி (17), வனஜா (18), உண்ணிகிருஷ்ணன் (19), சுஜா (20) ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வந்த ஆணையர் (பொறுப்பு) டெல்விஸ்ராய் வேண்டுகோளின்படி போராட்டத்தை கைவிட்டு, உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

    நகர்மன்றத் தலைவி விளக்கம்: இதுகுறித்து, பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவி எஸ்.ஆர். சத்யாதேவி கூறியாதாவது:

    நகர்மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 30) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அனைத்து உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  நகராட்சி ஆணையர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பொறியாளர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

    கூட்டம் நடத்தினால் உறுப்பினர்களின் கோரிக்கைக்கும், கேள்விகளுக்கும் தகுந்த பதில் அளிக்க அலுவலர்கள் இல்லாத காரணத்தினால், அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து உறுப்பினர்களுக்கும் திங்கள்கிழமை மாலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் நடைபெற வேண்டிய கூட்டம் இடைத்தேர்தல் அறிவிப்பால் நடைபெறவில்லை. இதுவே நகர்மன்றக் கூட்டம் நடைபெறாததற்கு காரணமாகும்.

    நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய் உடைந்து விட்ட காரணத்தால், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வீயன்னூர் அருகே உடைந்த குழாயை குடிநீர் வடிகால் வாரியத்தினர் சரி செய்துவிட்டனர். ஆனாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய குழித்துறை, குளச்சல் நகராட்சியிலிருந்து டேங்கர் லாரி மூலம் நகராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai