Enable Javscript for better performance
பிஎஸ்என்எல் ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக் கோரி, பிஎஸ்என்எல்  ஊழியர்கள் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சங்காதர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் இந்திரா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கணபதியாபிள்ளை, ராஜ், சதீஷ்குமார், முகமது ரபீக், ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கவேண்டும். நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத  ஓய்வு கால பணப்பலன்களை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷமிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai