சுடச்சுட

    

    சொத்துக் குவிப்பு வழங்கிலிருந்த ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    நாகர்கோவில் ராணித்தோட்டம் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு தொழிற்சங்கச் செயலர் காரவிளை செல்வன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தொழிற்சங்கச் செயலர் காசிராஜன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கச் செயலர் ராஜேந்திரன், அணிச் செயலர்கள் மனோகரன், பாலஜனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     நாகர்கோவில் நகராட்சி அதிமுக உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு உறுப்பினர் சீனிவாசசங்கர் தலைமை வகித்தார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சுசீந்திரம் தபால் அலுவலகம் முன் பேரூர் செயலர் குருசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நாகர்கோவில் நீதிமன்றம் முன், அரசு வழக்குரைஞர் ஞானசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

    பாத யாத்திரை: அதிமுக நகரச் செயலர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்  சகாயராஜ் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் வடசேரி சிவன் கோயிலிலிருந்து பாத யாத்திரையாக குமாரகோவிலுக்கு புறப்பட்டனர். வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து ஜெயலலிதா பேரவைச் செயலர் ஐய்யப்பன் தலைமையில் அங்கபிரதட்சணம் செய்தனர்.

    கன்னியாகுமரி: தென்தாமரைகுளம் பேரூர் அதிமுக செயலர் ஆர்.எஸ்.மாசானமுத்து சார்பில் உண்ணாவிரதம்  நடைபெற்றது. ஒன்றியச் செயலர் பா.தம்பித்தங்கம், தென்தாமரைகுளம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் வலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தக்கலை: ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி இந்து கோயில், கிறிஸ்தவ ஆலயம், முஸ்லிம் பள்ளி வாசலில் குமரி மேற்கு மாவட்ட அதிமுகவினர் புதன்கிழமை மும்மத பிரார்த்தனை செய்தனர். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம் தலைமையில் குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில், பெரிநாயகி அன்னை ஆலயம், தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai