Enable Javscript for better performance
இன்று குமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி படும் நிகழ்வு- Dinamani

சுடச்சுட

    

    இன்று குமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி படும் நிகழ்வு

    By DN  |   Published on : 02nd October 2014 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் வியாழக்கிழமை (அக். 2) அபூர்வ சூரிய ஒளியைக் காணலாம்.

    தமிழக அரசு சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் தலைமை வகித்து, காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இந்நிகழ்ச்சிக்கு, எம்.எல்.ஏ.க்கள் கே.டி. பச்சைமால், நாஞ்சில் அ. முருகேசன், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் நடுவே அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும். இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சார்-ஆட்சியர் சங்கர்லால் குமாவத், எம்.எல்.ஏ.க்கள் சி. ஜாண் ஜேக்கப், எஸ். விஜயதாரணி, ஜே.ஜி. பிரின்ஸ், புஷ்பலீலா ஆல்பன், மாநில மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சேவியர் மனோகரன், குமரி மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ. அசோகன், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் த. பிரபா வின்ஸ்டன், துணைத் தலைவர் பா. தம்பித்தங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai