சுடச்சுட

    

    கருங்கல்லில் உள்ள வியாபாரிகள் நலச்சங்க ஆண்டுவிழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அதன் தலைவர் சோபனம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அஜித்குமார் சட்ட ஆலோசகர்கள் பிளச்சர், சேகர், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செயற்குழு உறுப்பினர் அருள்ராஜ் வரவேற்றார். செயலர் துரைரைஜ் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலச் செயலர் ஜோசப், மாநிலதுணைத்தலைவர் செல்வராஜ், மாநில இணைச்செயலர் ராஜ்குமார், நெல்லை தெற்கு மாவட்டத் தலைவர் சின்னத்துரை ஆகியோர் பேசினர்.

    சிறப்புவிருந்தினராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜாண்ஜேக்கப், பேரமைப்பின் தென்மண்டலத் தலைவர் சுப்பிரமாணியன், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூபிரேம்குமார், கருங்கல் பேரூராட்சித் தலைவி எப்சிராணி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

    தொடர்ந்து கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த கல்வியாண்டில் தமிழ்வழிக் கல்வி பயின்று முதல் மதிப்பெண் பெற்ற 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    அமைப்பின் புதிய தலைவராக பிளச்சர் துணைத்தலைவராக அஜித்குமார், செயலராக துரைராஜ், உதவிச் செயலராக அருள்ராஜ், பொருளாளராக ஆனந்த மார்ட்டின், செயற்குழு உறுப்பினர்களாக அலோசியஸ், கிங்சிலி, தங்கசுவாமி, சிருள் உள்பட 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    முன்சிறை துணைமின்நிலைய உதவி செயற்பொறியாளர் ஐசன், வியாபாரிகள் நலச்சங்க கௌவுரவ உறுப்பினர் கெவன்மில்லர், நல்லூர் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ், டென்சன், கருங்கல் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், கௌரவ உறுப்பினர் வேதபால்மர், பூதலிங்கலம், செல்லத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai