சுடச்சுட

  

  திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஷுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அபிலாஷ்  எழுதிய கால்கள் என்னும் நூலுக்கு சாகித்ய அகாதெமியின் யுவபுரஷ்கார் விருது வழங்கப்பட்டது. அவருக்கு  திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் துறை சார்பில் பாராட்டு விழா கல்லூரித் தாளாளர் எச்.முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது.  தமிழ் துறை பேராசிரியர் ஹமீம்முஸ்தபா, முதல்வர் ஞானதாஸ், ஆங்கில ஆய்வுத்துறை தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். அபிலாஷ் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரிர்கள், மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai