சுடச்சுட

    

    நாகர்கோவில், அக். 1: சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழாவை நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் தமிழ்நாடு காமராஜர் நற்பணிமன்றம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு சிவாஜி கணேசன் உருவ படத்திற்கு நற்பணி மன்றத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் அலெக்ஸ், பிரபு மன்றத் தலைவர் ஜெயபாலன், சிவாஜி சமூக நல பேரவைத் தலைவர் கண்ணன், நற்பணிமன்ற பொருளாளர் கிளமண்ட் ஜோஸ், தொழிற் சங்கத் தலைவர் டி.ஏ. பெருமாள், காங்கிரஸ் விவசாய சங்கத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். சிவாஜிக்கு "பாரத ரத்னா' விருது வழங்குவதோடு தபால் தலையும் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் சிவாஜி கணேசனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணாட்டுவிளை வி. பாலையா தலைமையில் வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் குமரி முருகேசன், மாநில பேச்சாளர் இரா. அய்யாத்துரை, பால்நேசமணி, சி.எல். ஜோ, அசோக்ராஜ், தவசிமுத்து, டி.கே. தாஸ், பத்பநாபன், சுந்தர், அலுவலக செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai