சுடச்சுட

    

    களியக்காவிளை பேரூராட்சியில் முழு சுகாதார திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இதையொட்டி பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பேரூராட்சி செயல் அலுவலர் சா. கிறிஸ்டோபர்தாஸ் தலைமையில் பேரூராட்சிப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒற்றாமரம், களியக்காவிளை உள்ளிட்டப் பகுதிகளில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலையோர புதர்கள் வெட்டி அகற்றுதல், வடிகால் பராமரித்தல், சாலை துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், தூய்மையான நகரம், பசுமையான நகரம் என்ற மையக் கருத்து குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி பணியாளர்களின் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் விவேக், பணியாளர்கள் நடராஜன், ராஜேந்திரன், பிபின்ஷாஜி, ஆல்பன், விஜூ மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai