சுடச்சுட

  

  ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை

  By DN  |   Published on : 02nd October 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கைநாகர்கோவில், அக்.1: ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பிரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, குமரி மாவட்ட முதல் மாநாடு நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆர். செல்லசாமி தலைமை வகித்தார்.

  மரிய வின்சென்ட் வரவேற்றார். மாநில அமைப்பாளர் எஸ். நூர்முகமது தொடக்க உரையாற்றினார். ரட்சண்ய சேனை மேஜர் ஜெ. ஜெயசீலன், லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மாணிக்கராஜ், கொடிக்கால் சேக் அப்துல்லா ஆகியோர் மாநாட்டு கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் வாழ்த்திப் பேசினர்.

  இஸ்லாமிய மக்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி வழங்கவேண்டும். சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்தவேண்டும். ஐ.ஐ.டி.,  ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி உள்ளிட்ட கல்வி, மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் தாமதமின்றி வழங்கவேண்டும். சிறுபான்மை நலத் துறையை தனித்துறையாக உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai