சுடச்சுட

    

    மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில், உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனங்களில் இருந்து ரூ. 2.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இதனடிப்படையில் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் மே.ர. முகுந்தன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை இரவு களியக்காவிளை, மார்த்தாண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த வாகனத் தணிக்கையில் சாலை வரி செலுத்தாமல் இயங்கிய கேரள பதிவெண் கொண்ட 2 ஆம்னி பேருந்துகளிலிருந்து தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் வசூல் செய்யப்பட்டது. வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 1 ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 35 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அதிகமாக மணல், கற்கள் ஏற்றிச் சென்ற 10 லாரிகளிலிருந்து ரூ. 1 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    மேலும் உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட இரு கனரக வாகங்களிலிருந்து ரூ. 15 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. 

    வாகனத் தணிக்கையின் போது மொத்தம் ரூ. 2.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து வாகனத் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றார்  வட்டார போக்குவரத்து அலுவலர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai