சுடச்சுட

    

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்

    By DN  |   Published on : 02nd October 2014 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், அக். 1: குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் தங்கள் பெயரை வாக்காளர்களாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2014 அன்று வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 15.10.2014 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 1.1.2015 அன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் தங்களது பெயரை வாக்காளராகப் பதிவு செய்யலாம். அத்துடன் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய உரிய படிவங்களை சம்பந்தப்பட்ட சார்-ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வழங்கலாம். இதற்கான சிறப்பு முகாம்கள் 19.10.2014 மற்றும் 2.11.2014 ஆகிய நாள்களில் அந்தந்த பகுதி வாக்குச் சாவடிமையங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள்  இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம். மேலும் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் மனுக்கள் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார் ஆட்சியர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai