சுடச்சுட

  

  இளம் பெண்ணை தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு

  By கன்னியாகுமரி  |   Published on : 03rd October 2014 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாமிதோப்பு அருகே தந்தையுடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணைத் தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

  கொட்டாரத்தை அடுத்த இடையன்விளையைச் சேர்ந்தவர் ராமஜெகன். இவரது மனைவி சாரதா (30). இவர் தனது தந்தை ராமருடன் மேல உடையப்பன் குடியிருப்பில் இருந்து பைக்கில் சாமிதோப்பை அடுத்த வடக்கு தாமரைகுளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இவரது பைக் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது சாரதா அணிந்திருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் சாரதா புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai