Enable Javscript for better performance
அரசுப் பேருந்து - பைக் மோதல்: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கருங்கல் அருகே அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

    கருங்கல் அருகேயுள்ள திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த ராஜ் மகன் ராஜகுமார் (30). சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,ராஜகுமார் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சவேரியார் மகன் குமார் என்பவருடன் வெள்ளிக்கிழமை மார்த்தாண்டம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி வந்து போது, எட்டணி பகுதியில் அரசுப் பேருந்தும் மோட்டார் சைக்கிள் மோதியதாம். இதில் பைக்கை ஓட்டி வந்த ராஜகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலயே இறந்தார்.

    உடன் வந்த குமார் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai