சுடச்சுட

  

  குலசேகரம் அருகேயுள்ள ஆற்றூர் அருள்மிகு ஆதி மகாமேரு ஸ்ரீ சாமுண்டேஸ்வரி தேவி திருக்கோயிலில் விஜயதசமி தினத்தையொட்டி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இத் திருக்கோயில் அறக்கட்டளையும், குமரி மாவட்ட கலைஞர்கள் கலைப் பண்பாட்டு மன்றமும் இணைந்து 47 ஆவது ஆண்டு விஜயதசமி தசரா திருவிழா மற்றும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை, அறக்கட்டளைத் தலைவர் தவத்திரு சோமன்சுவாமிகள் தொடங்கிவைத்தார். இதில் கலைப்பிரிவு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். களரி கலைஞர் ஆற்றூர் ஹாரீஸ் ஆசான், பரத நாட்டியம் அனுக்கிரஹா, குரலிசை கலைஞர் கே. சதீஷ், நாடகக் கலைஞர் பத்மகுமார், கல்சிற்பக் கலைஞர் ராஜீவ், மரசிற்பக் கலைஞர் வினோத், புகைப்பட கலைஞர் ஜெயபாபு, ஓவியக் கலைஞர் ரவி உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்று பயிற்சியளித்தனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் காவேரிகண்ணன், அரசு ஹோமியோ மருத்துவர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai