Enable Javscript for better performance
கதர் கிராமத் தொழில் வாரியம்: தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 1.50 கோடி- Dinamani

சுடச்சுட

    

    கதர் கிராமத் தொழில் வாரியம்: தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 1.50 கோடி

    By நாகர்கோவில்,  |   Published on : 04th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ. 1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்துள்ளார்.

    காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் நாகர்கோவில் காமராஜர் கட்டடத்தில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, தீபாவளி சிறப்பு முதல் கதர் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசியது: குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் நாகர்கோவில், கன்னியாகுமரி, கருங்கல், அருமனை, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    தாற்காலிக விற்பனை நிலையங்களான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பணிமனைகளான திங்கள்சந்தை, குளச்சல், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், ராணித்தோட்டம், படந்தாலுமூடு, மார்த்தாண்டம் மற்றும் திருவட்டாறு ஆகிய இடங்களிலும் ராஜாக்கமங்கலம், தக்கலை, குருந்தன்கோடு, முஞ்சிறை,கிள்ளியூர், திருவட்டாறு, மேல்புறம், தோவாளை மற்றும் அகஸ்தீசுவரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

    மத்திய மாநில அரசுகளின் உதவி பெற்று அனைத்து ரகங்களுக்கும் 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நிகழாண்டில் கதர் விற்பனைக் குறியீடாக ரூ. 1.50 கோடியும், தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக ரூ. 90 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

    விழாவில் கதர் கிராமத் தொழில்துறை உதவி இயக்குநர் கோ. அருணாசலம், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. அண்ணா, கதர் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai