சுடச்சுட

  

  காமராஜர் நினைவு நாள் குமரி மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை

  By கன்னியாகுமரி  |   Published on : 04th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவி மீனாதேவ், கோட்ட பொறுப்பாளர் வேல்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாநிலத் தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.அருள்ராஜ், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் சர்ச்சில், செயலர் டேவிட் முத்துராஜ், அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

  கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணைத் தலைவர்கள் நடேசன், ஆறுமுக சோழவன், நாகர்கோவில் நகரத் தலைவர் ஜெயச்சந்திரன், அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் டான்போஸ்கோ, மாவட்ட பொதுச் செயலர் திருத்துவராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சாம் மோகன்ராஜ், முருகன், ஜாண்சுந்தர், செல்வநாதன், தங்கராஜா, விஜய் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் ஏ.ரமேஷ் தலைமையில் மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலர் பி.ராஜபிரகாஷ் மற்றும் சமக நிர்வாகிகள் விஜயகுமார், சாமுவேல், அசோகன், சுதாகர், டேவிட்சன், ரவி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai