சுடச்சுட

  

  கன்னியாகுமரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

  குமரி அறிவியல் பேரவை சார்பில் காந்தியடிகளும், சூழியல்களும் என்னும் பொருளில் காந்தி ஜெயந்தி விழா உலக அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மேல்புறம் அருகேயுள்ள மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்ஸர் கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தார்.

  குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார். தொடர்ந்து, சிந்திகேயாள், நல்லூர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் ஜே. ஜோபிரகாஷ் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு நற்பணி மன்றத் தலைவர் பி. கே. சிந்துகுமார், நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரி பேராசிரியர் சி. பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  விழாவில், மாவட்டத்தில் மொழி, கல்வி, கிராமத் தொண்டுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, பேராசிரியர் தியாகசுவாமி நினைவு காந்திய விருது வழங்கப்பட்டன.

  விருதுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் கே. விஜயகுமார் வழங்கிப் பேசினார். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் ஜான்சன் நன்றி கூறினார்.

  கன்னியாகுமரி மாவட்ட காந்தீய மக்கள் இயக்கம் காந்தி மற்றும் காமராஜர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காந்தி மண்டபம் அருகே மதுப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ரா.கதிரேசன் தலைமை வகித்தார். கவிஞர் கோ.முத்துக்கருப்பன், காந்தீய மக்கள் இயக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், தங்கரதி, ஜார்ஜ் பிலிஜின், சாகுல்ஹமீது, கோசலை, முருகஜெகன், ராஜன், ஜெகதீசன், முனியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  தக்கலை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி காந்தியம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் முளகுமூடு சிகரம் மையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

  எழுத்தாளர் பிரேம்குமார் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் விமர்சனங்களும் தொகுப்புரையும் நடைபெற்றது.

  கருத்தரங்கில் தக்கலை ஹலிமா, கவிஞர் குமரி எழிலன், சிகரம் நிறுவனர் செபாஸ்டின், முரசு கலைக்குழு இயக்குநர் ஆனந்த், இருதயராஜ், சிவஸ்ரீ ரமேஷ், சுஜித், சாதிக் அலி, ஓவியர் பகவதி, குமார், செல்வி, சுஜா, நாடக இயக்குனர் ஜானகி, லெனின், எட்வட்சன், ஜோசப்ராஜ், மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட துணைச்செயலர் ஜாண் இளங்கோ வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மிக்கேல்ராஜ் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai