சுடச்சுட

    

    சுசீந்திரத்தில் சிறை அமைத்து உண்ணாவிரதம் இருந்த அதிமுக நிர்வாகி கைது

    By நாகர்கோவில்  |   Published on : 04th October 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சுசீந்திரத்தில் தனக்குத் தானே சிறை அமைத்து உண்ணாவிரதம் இருந்த அதிமுக நிர்வாகியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுசீந்திரம் பேரூர் ஜெயலலிதா பேரவைச் செயலர் கணபதி (45), சிறை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சுசீந்திரம் கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயிலில் இரும்பு கம்பியால் சிறை போன்ற அமைப்பை அவர் ஏற்படுத்தி, அங்கு அவர் கடந்த 6 நாள்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    ஜெயலலிதா விடுதலை ஆகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடருவதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் 6 ஆவது நாள் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து போராட்டத்தை கைவிடும்படி சுசீந்திரம் போலீஸார் அவரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் போராட்டத்தை கைவிட மறுத்தார். இதையடுத்து உண்ணாவிரதம் இருந்த கணபதியை போலீஸார் கைது செய்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai