தொடர் விடுமுறை திற்பரப்பில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
By குலசேகரம், | Published on : 04th October 2014 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தொடர் விடுமுறை காரணமாக திற்பரப்பு அருவி மற்றும் திற்பரப்பு படகுத் துறையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஆயுத பூஜை உள்ளிட்ட பூஜை விடுமுறை நாள்கள் தொடர்ந்து விடப்பட்டுள்ளதால், திற்பரப்பு அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். மேலும் அருவி அருகேவுள்ள படகு குழாமிலும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் சென்று உல்லாசமாக படகு சவாரி செய்து மகிந்தனர்.