Enable Javscript for better performance
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி சென்னை நோக்கி 100 நாள் நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி சென்னை நோக்கி 100 நாள் நடைப்பயணம்

    By கன்னியாகுமரி  |   Published on : 04th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி சென்னை நோக்கி 100 நாள் நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கியது.

    கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நடைப்பயணத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தொடங்கிவைத்தார். நடைப்பயணம் தமிழகத்தின் 32 மாவட்டங்கள் வழியாக 2015- ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. நடைப்பயணத்தில் போதைக்கு எதிரான வீதி நாடகம், கலை நிகழ்ச்சிகள், கல்லூரி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடக்க விழா நிகழ்ச்சியில் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் இனாமுல் ஹாசன், அருள்தாஸ், செந்தமிழ் செல்வி, தனராஜ், கு.பாலகிருஷ்ணன்,

    ஆனந்தியம்மாள், ஷகிலா, வழக்குரைஞர் திருஞானசம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக ஆர்வலர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, மவுலானா அப்துல்காதர், அருள்பணி நெல்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர். எம்.வினோத் நன்றி கூறினார்.

    நாகர்கோவில் : மது போதைக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் 2 ஆம் நாளாக வெள்ளிக்கிழமை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நடைப்பயணம் தொடங்கியது. இதில் சசிபெருமாள் பங்கேற்றார். அவர் கழுத்தில் காலி மதுபாட்டில்களை மாலையாக தொங்கவிட்டிருந்தார். அவருடன் சமூக சேவகி ஆனந்தியம்மாள், தன்ராஜ், இனாம் ஹசன், அருள், பாலகிருஷ்ணன், டாக்டர் ஷகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai