சுடச்சுட

    

    மக்கள் நினைத்தால் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும்

    By கன்னியாகுமரி,  |   Published on : 04th October 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் நினைத்தால் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும் என்று கன்னியாகுமரியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த தூய்மையான இந்தியா திட்டம் தொடக்க விழா குமரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நேரு இளையோர் மைய இயக்குநர் சதீஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

    திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள இந்த திட்டம் இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், குஜராத், கன்னியாகுமரி, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 எல்லைகள் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள நூறு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் பொது இடங்களை அசுத்தம் செய்வோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் அந்த நாடுகள் எப்போதும் தூய்மையாக உள்ளது. 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவிலும் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தூய்மையை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

    விழா மேடையில் இந்த திட்டத்துக்கான முத்திரை மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த நேரு இளையோர் மைய தொண்டர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மேலும், கன்னியாகுமரி அரசுப் பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை வி.ஜி.பி. நிறுவனர்} தலைவர் வி.ஜி.சந்தோசம், நாகர்கோவில் நகர்மன்றத் தலைவி மீனாதேவ், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், கோட்ட பொறுப்பாளர் வேல்பாண்டியன், மாவட்ட பாஜக பிரமுகர்கள் ராஜன், தேவ், முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புனித சிலுவைக் கல்லூரி: நாகர்கோவில் புனித சிலுவைக் கல்லூரியில் வன உயிரின வார விழா மற்றும் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

    புனித சிலுவைக் கல்லூரியும், இயற்கை நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு கல்லூரி சூழியல் மன்ற ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் அனாமி அகஸ்டஸ் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ அதிகாரி ஐவர் தேவவரம் மற்றும் அருமைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூழியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெனிபடுவா வரவேற்றார். தேசிய மாணவர் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோ. பிரகாஷ், வன உயிரின வார விழா குறித்துப் பேசினார். இயற்கை நண்பர்கள் அமைப்பின் இணைச் செயலர் அருள்கண்ணன் தூய்மை திட்டம் குறித்துப் பேசினார். இயற்கை நண்பர்கள் அமைப்பின் செயலர் டாக்டர் ரேணு பிரசாத் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து, வன உயிரின வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் மங்காவிளை ராஜேந்திரன், திருஇருதய பள்ளி முதல்வர் எட்வின் பாவேந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai