Enable Javscript for better performance
மது விற்பனை: இருவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    குலசேகரத்தில் காந்தி ஜெயந்தி நாளில் தனியார் மதுக்கூடத்தில் மது விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

    குலசேகரம் நாகக்கோடு அருகே தனியார் மனமகிழ் மன்ற மதுக்கூடத்தில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீஸ் ஏஎஸ்பிக்கு அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்வையிட்ட போது மது விற்பனை நிறுத்தப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது பொதுமக்கள் தங்களிடம் இருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் காண்பித்தனர்.

    இதையடுத்து போலீஸார் அங்கு மதுவிற்பனை செய்த உத்தமபாளையத்தையைச் சேர்ந்த முனியாண்டி (59), திண்டுகல்லைச் சேர்ந்த முருகன் (40) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 69 மதுபாட்டில்களையும் பறிமுதல்

    செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai