சுடச்சுட

    

    விவேகானந்தா கேந்திர பள்ளியில் வித்யாரம்பம்

    By கன்னியாகுமரி,  |   Published on : 04th October 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வித்யாலயம் மற்றும் பகவதியம்மன் கோயிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    விஜயதசமி பண்டிகை வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளுக்கு எழுத்து கற்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி பள்ளிகள் மற்றும் கோயில்களில் நடைபெற்றன.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பள்ளி வளாகத்தில் சரஸ்வதி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விவேகவாணி இதழ் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து விஜயதசமியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

    தொடர்ந்து தட்டில் அரிசியை பரப்பி அதில் குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதும் வித்யாரம்பம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சரஸ்வதி வேடமணிந்த மாணவிகள், பள்ளி முதல்வர் ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஏராளமான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியை கோயில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai