Enable Javscript for better performance
ஐமாஅத் கூட்டமைப்பு ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு 9 ஆம் ஆண்டு நிறைவு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

    விழாவிற்கு அமைப்பின் பொதுச் செயலர் மீரான் மைதீன் தலைமை வகித்தார். தலைவர் இப்ராகீம்கான் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முகமது பஷீர் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் அப்துல் ஹக்கீம் சிறப்புரையாற்றினார். இமாம் பாதுஷா, பேராசிரியர்கள் முகம்து பாரூக், அப்துல் ரகுமான், ஷேக் இல்யாஸ், சம்சுதீன், ஷேக் உம்மர், அப்துல் நாசர், அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai