சுடச்சுட

    

    குமரியில் பிடிபட்ட அபூர்வ வகை லம்பாடி சுறா, கொம்பன் மீன்கள்

    By கன்னியாகுமரி,  |   Published on : 05th October 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி வாவத்துறை கடற்பகுதி மீனவர்கள் வலையில் பிடிபட்ட அபூர்வ வகை லம்பாடி சுறா, கொம்பன் மீன்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரை பகுபதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலை 4.30 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் காலை 7 மணிக்கு மேல் கரைக்குத் திரும்புகின்றனர்.

    இங்கு பிடித்து வரப்படும் மீன்களை கேரளம் மற்றும் உள்ளூர் மீன் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை வழிவலை படகு என அழைக்கப்படும் சிறிய வகை விசைப்படகில் சென்ற மீனவர்களுக்கு ஆழ்கடல் பகுதியில் வாழும் லம்பாடி சுறா, கட்டகொம்பன் ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. இந்த மீன்களை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச் சென்றனர். கரைப் பகுதியில் போடப்பட்டிருந்த இந்த மீன்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக வந்து பார்வையிட்டனர். சிலர் அவற்றை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    இது குறித்து வாவத்துறையைச் சேர்ந்த மீனவரான ஜாண் (60) கூறியதாவது: லம்பாடி சுறா ஆழ்கடல் பகுதியில் வாழும் மீன் இனமாகும். எப்போதாவது கரைப் பகுதிக்கு வரும்போது மீனவர்கள் வலையில் இவை மாட்டிக் கொள்கின்றன. இந்த மீனில் அதிகமான எண்ணெய் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

    கட்ட கொம்பன் மீன் ஆழ்கடல் பகுதியில் வாழ்பவை என்றாலும் இரைதேடி கரைப் பகுதிக்கு அவ்வப்போது வரும்போது வலையில் சிக்கிக் கொள்கின்றன. தற்போது பிடிபட்டுள்ள இந்த மீன் சுமார் 600 கிலோ எடை கொண்டதாக இருந்தது. குழம்பு வைத்து சாப்பிடுவதற்கு இந்த மீன் மிகவும் ருசியாக இருக்கும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai