சுடச்சுட

    

    குழித்துறை ரயில் நிலையத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ் தலைமை வகித்தார். ரயில்வே கோட்ட பாதுகாப்பு அலுவலர் விஜகுமார் முன்னிலை வகித்தார்.

    சேவபாரதி தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை மாணவர்கள் ரயில்வே நடைபாதை, ரயில் பாதை, நடைமேடை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை செய்தனர். முன்னதாக அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழியேற்றனர். மேலும், ரயில்வே நடைபாதை பகுதிகளில் செடிகள் நடப்பட்டன. இதில், நிலைய அலுவலர் சுகுமாரன், தலைமை மருத்துவ அலுவலர் மேரி மேத்யூ, சிட்டி அரிமா சங்கச் செயலர் தேவகுமார் சாமுவேல், குடியிருப்போர் சங்கத் தலைவர் மோகன்தாஸ், நல்லூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai