சுடச்சுட

  

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி நாகர்கோவிலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதமிருந்தனர்.

  நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஜகபர் சாதிக் தொடங்கிவைத்தார்.

  மாநில சங்கத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், தென்தாமரைகுளம் பேரூராட்சித் தலைவர் பாலச்சந்திரன், நிர்வாகிகள் நாகராஜன், ஜெகதீஸ், விஷ்ணுராம், ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், சுரேஷ், விஜயகுமார், லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து கேபிள் டி.வி. ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.

  ஜெயலலிதாவின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai