சுடச்சுட

  

  கொத்தடிமை முறைக்கு எதிராக மாநிலம் தழுவிய பிரசார பயணம்

  By கன்னியாகுமரி,  |   Published on : 05th October 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொத்தடிமை முறைக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மாநிலம் தழுவிய பிரசார பயணத்தை நீதியரசர் எம். கற்பகவிநாயகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

  மதுரை சோக்கோ அறக்கட்டளை சார்பில் காந்தி மண்டபம் முன் தொடங்கிய இந்த பிரசார பயணம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக அக். 11 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இப்பயணத்தின் போது தமிழகத்தில் உள்ள 2 லட்சத்து 70 ஆயிரம் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கவேண்டும். விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை ரூ. 25 ஆயிரத்தில் இருந்து, ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும்.

  கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் முன்னுரிமை வழங்கவேண்டும். தேசிய அளவில் கொத்தடிமைகள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பகவிநாயகம் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி பி. மைக்கேல் வேத சிரோமணி, எழுத்தாளர் பொன்னீலன், சமூக ஆர்வலர் ஹென்றி தீபக்னே, விவேகானந்தா கல்லூரிச் செயலர் ஆர். அருண்குமார், பயண ஒருங்கிணைப்பாளர் செல்வகோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கருத்தரங்கம்: கொத்தடிமை முறைக்கு எதிராக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கம் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

  கருத்தரங்கை தொடங்கி வைத்து நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் தங்கள் ஏழ்மை நிலை காரணமாக படிக்க முடியாமல் கொத்தடிமைகளாக பல்வேறு தளங்களில் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் இப்பிரச்னையை கையில் எடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது அவசியமாகிறது. இலவசமாக கிடைக்கும் எந்த பொருளும் உண்மையான மனநிறைவை தருவதில்லை. எனவே மாணவர்கள் உழைப்புக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். விவேகானந்தரின் சிந்தனைகளையும், தத்துவங்களையும் ஏற்று இளைஞர்கள் வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

  தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். முன்னதாக கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலர் ஆர். அருண்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ். சோமசுந்தரம் வரவேற்றார். விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai