சுடச்சுட

    

    சித்திரங்கோட்டில், பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டு மன்றத்தின் 26ஆவது ஆண்டு விழா மற்றும் மகாத்மா காந்தியின் 146ஆவது பிறந்த தின விழா ஆகிய இருபெரும் விழாக்கள் நடைபெற்றன.

    விழாவுக்கு, மன்ற நிறுவனர் வழக்குரைஞர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் வழக்குரைஞர் ஜாண்கிறிஸ்டோபர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜோஸ், லாரன்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வழக்குரைஞர் கீன்ஸ், ஆசிரியர் ஆன்றனிகுமார், கவிஞர் பிரதீப்குமார், சுபாஸ் சந்திரபோஸ், மன்றத் தலைவர் டேவிட் ஜிம்சன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் குமரி ஆதவன், சித்தரங்கோடு பகுதியில் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி லட்சுமி, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மகேஷ் ஆகியோருக்கும், 10 ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழாவில், 25 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்களும், நூறு பேருக்கு வேட்டி, சேலையும், உடல் செயலிழப்பு ஏற்பட்ட காயக்கரையைச் சேர்ந்த இளைஜர் சபீனுக்கு ரூ. 10,000}மும் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்கள், ஊர்மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai