சுடச்சுட

    

    ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பெருமாள் கோயிலில் யாகம்

    By நாகர்கோவில்  |   Published on : 05th October 2014 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிமுக சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    குமரி அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த யாகத்துக்கு மாவட்டச் செயலர் என். தளவாய்சுந்தரம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் சதாசிவம், துணைச் செயலர் ராஜன், இளைஞர் பாசறைச் செயலர் ஜெயசீலன், நகரச் செயலர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணகுமார், சகாயராஜ், தொகுதிச் செயலர் சுகுமாரன், நகர அவைத் தலைவர் மாதவன், நகராட்சி உறுப்பினர்கள் சீனு, ஜாஸ்மின் சகிலாபாய், நிர்வாகிகள் பொன். சுந்தர்நாத், ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், களபம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின், தளவாய்சுந்தரம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். இதில், திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai