சுடச்சுட

  

  நித்திரவிளை அருகே படிப்பகத்தில் திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன.

  நித்திரவிளை அருகே சமத்துவபுரம் பகுதியில் அன்னை இந்திரா நினைவு படிப்பகம் உள்ளது. இதனருகே நித்திரவிளை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பகத்தை அதன் நிர்வாகிகள் சனிக்கிழமை இரவு பூட்டிச் சென்றனராம். அதன்பின், படிப்பகத்தின் உள்ளிருந்து புகை வந்ததாம். இதை கவனித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசேகர் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

  தீயணைப்பு நிலைய அலுவலர் பத்ரகிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த புத்தகங்கள், மேஜை, நாற்காலி உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து, நித்திரவிளை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai