Enable Javscript for better performance
பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக 5 பேர் கைது

    By களியக்காவிளை,  |   Published on : 05th October 2014 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக, களியக்காவிளையில் 3 பேரையும், மார்த்தாண்டத்தில் இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுச் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொதுச் சொத்தை சேதப்படுத்த திட்டமிட்டதாக அதங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபேஸ் (27), குறுமத்தூர் பினு, படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த பிரபு (40) ஆகியோரை கைது செய்தார். இதேபோல், மார்த்தாண்டம் பகுதியில் உதவி ஆய்வாளர் ஆல்பின்பிரிஜித்மேரி தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்த பெனடிக்ட் (28), கிறிஸ்டோபர் (28) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai