சுடச்சுட

    

    முளகுமூடு மறைவட்ட அருள்பணி பேரவை மற்றும் நல்வாழ்வு பணிக்குழு சார்பில் முதுமையைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி ஹிலாரி தலைமை வகித்தார். வட்டார குருகுல முதல்வர் பேரருள்பணி சகாயதாசு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். சிலம்பை டென்னிசன் அறிமுறிமுக உரை நிகழ்த்தினார். நாஞ்சில் பால் நிர்வாகிகள் அருள்பணியாளர்கள் மரியஇராஜேந்திரன், ஜோஸ்ராபின்சன், ஞானதாஸ், பேராசிரியர் குமாரசெல்வா, அருள்பணி இராஜாமணி, பங்கு பணியாளர்கள் வில்லியம், ஜெயகொடி, ஆண்ட்ரூ ஆகியோர் பேசினர். மாலையில் முதியவர்களின் நலனுக்காக நடந்த திருப்பலியில் அருள்பணியாளர்கள் ஜோக்கின்ஸ், டைட்டஸ் மோகன், வேல்ஸ்ராஜா, கிறிஸ்துதாஸ், ஜெயபிரகாஷ், தொபியாஸ், உள்பட அருள்பணியாளர்கள் திருப்பலி நிறைவேற்ற வட்டார முதன்மை பணியாளர் மறையுரையாற்றினார். இதில் வட்டார துணைச் செயலர்அருள்ஜோசப், பொருளாளர் ஜஸ்டஸ் ரோஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

    கிராமங்கள்தோறும் முதியவர்களுக்காக பூங்காக்கள் அமைக்கவேண்டும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி, பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் முதியோருக்கு தனி சிகிச்சைப் பிரிவு, தனி மருத்துவர் குழு அமைக்க தமிழக முதல்வரை கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    குறும்படம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நல்வாழ்வு பணிக்குழுச் செயலர் ஜாண்பெனடிக்ட் வரவேற்றார். பணிக்குழுத் தலைவர் மா. சூசைமரியான் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai