சுடச்சுட

    

    வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அரசு துறைகள் தயாராக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்

    By நாகர்கோவில்,  |   Published on : 05th October 2014 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பருவ மழை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியது; குளம், குட்டை மற்றும் ஓடைகளில் மழை வெள்ளம் தங்கு தடையின்றிச் செல்ல ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். பலவீனமான கரைகளை சரிசெய்ய வேண்டும். மழை காலத்தில் அணைகளின் நீர்மட்டத்தை தினம் ஆய்வு செய்ய வேண்டும். நீர்மட்டத்தை குறைக்க தண்ணீரை வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்கவேண்டும்.

    தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைக்க பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவசர காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக கல்வி நிலையங்கள், சமுதாய நலக் கூடங்கள் தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து கட்டடங்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தண்ணீர் புகுந்த பகுதிகளில் உள்ள மக்களை காப்பாற்ற தேவையான ரப்பர் படகு, கவச உடை மற்றும் பாதுகாப்பு மிதவை போன்ற மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் முறிந்துவிழும் மரங்கள், மின்கம்பங்களை உடனுக்குடன் அகற்ற இயந்திரங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு அரிசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மருந்துகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கவும் சிறப்புக்குழு அமைத்திட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

    பருவமழை கால இயற்கை இடர்பாடுகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாடு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077}ஐ பயன்படுத்தலாம். மேலும் 279090 மற்றும் 279091 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு விவரம் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai