Enable Javscript for better performance
ஆயுத பூஜை: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆயுத பூஜை: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி அளிப்பு

    By நாகர்கோவில்  |   Published on : 06th October 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவிலில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் அரிசி வழங்கப்பட்டது.

    காமராஜர் நற்பணி மன்ற ஆட்டோ- டாக்ஸி ஓட்டுநர்கள் சார்பில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவுக்கு தொழிற்சங்கத் தலைவர் டி.ஏ.பெருமாள் தலைமை வகித்தார். செயலர் பாபு வரவேற்றார்.

    நிர்வாகிகள் பெனடிக்ட், பொன்ராஜ், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட பாஜக வர்த்தக அணித் தலைவர் பி. முத்துராமன், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் அலெக்ஸ், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் பெஞ்சமின், காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ராம்குமார், கிளமென்ட் ஜோஸ், இனியன்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி ஆகியவற்றை நாகர்கோவில் நகர்மன்றத் தலைவர் எம்.மீனாதேவ் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai