சுடச்சுட

    

    ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணி

    By களியக்காவிளை  |   Published on : 06th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை அருகேயுள்ள ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, ஆறுதேசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து காந்தி ஜெயந்தியையொட்டி இந்த தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டன.

    இந்நிகழ்ச்சிக்கு நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். மரியகிரி கல்லூரி நிர்வாகி ஜோஸ்பிரைட் முன்னிலை வகித்தார். இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சுகாதார நிலைய வளாகத்தில் காணப்பட்ட புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு, துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஏற்பாடுகளை கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்சிங் மேற்கொண்டார். இதில், மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, ரெனீஷ், சுகாதார ஆய்வாளர் சத்தியநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai