Enable Javscript for better performance
குமரியில் காலாவதியான பேருந்துகள் இயக்குவதை தடை செய்ய வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் காலாவதியான பேருந்துகள் இயக்குவதை தடை செய்ய வலியுறுத்தல்

    By கருங்கல்,  |   Published on : 06th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காலாவதியான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதை உடனே தடை செய்து புதிய பேருந்துகளை இயக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    கிள்ளியூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழுக் கூட்டம் கருங்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். கிள்ளியூர் வட்டாரச் செயலர் வில்சன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் முருகேசன் பேசினார்.

    குண்டும், குழியுமாகக் காணப்படும் கருங்கல்- திக்கணங்கோடு சாலையை உடனே சீரமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.

    கருங்கல்- நாகர்கோவிலுக்கு பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட 9 எப் வழித்தடப் பேருந்தை பயணிகள் நலன் கருதி, மீண்டும் முழுநேரமாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லசாமி, பொன்னுசாமி, சாந்தகுமார், கிறிசாந்துமேரி, ஜவாஹர், ரசலானந்தராஜ், அல்போன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai