சுடச்சுட

    

    ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

    By நாகர்கோவில்  |   Published on : 06th October 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலரும், வக்ஃபு வாரியத் தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். சிறுபான்மை நலப்பிரிவுத் தலைவர் எ.ஜஸ்டின் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், கிழக்கு மாவட்டச் செயலர் என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

    முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், பத்மேந்திரா சுவாமிகள், அவைத் தலைவர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், பொருளாளர் ஞானசேகர், அணிச் செயலர்கள் எம்.சேவியர் மனோகரன், எஸ்.எ.அசோகன், பாலஜனாதிபதி, டி.மனோகரன், காரவிளை எம்.செல்வன், டாரதிசாம்சன், ஜெயசீலன், தாணுபிள்ளை, ஒன்றிய மற்றும் நகரச் செயலர்கள் சந்திரன், அருள்தாஸ், கே.சி.யு.மணி, பா.தம்பிதங்கம், ராமகிருஷ்ணன், அசோக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், சகாயராஜ், முன்னாள் துணைச் செயலர் ஆர்.கிருஷ்ணதாஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதாமணி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சகாய ஜெயராணி, சாந்தி இசக்கிமுத்து, அக்ஷயா கண்ணன், தாணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தக்கலை: அதிமுக விவசாய அணி மற்றும் மருத்துவ அணியினர் வேர்க்கிளம்பியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வேர்க்கிளம்பியில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ் தலைமை வகித்தார்.

    இதில், மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மருத்துவ அணிச் செயலர் ஆல்பர்ட், விவசாய அணிச் செயலர் செல்லப்பன், ஒன்றியச் செயலர்கள் ஜெசுதர்சன் (திருவட்டாறு), மத்தியாஸ் (தக்கலை), டாக்டர் மாதேஷ், பேரூர் செயலர்கள் ஷிபின் (வேர்க்கிளம்பி), மோகன்குமார் (பொன்மனை), முருகன் (ஆற்றூர்), பிஜி (திற்பரப்பு), ஏற்றக்கோடு ஊராட்சி செயலர் மனோன்மணி, நிர்வாகிகள் தங்கப்பன், கனகராஜ், நிமால், விஜாசந்திரன், வின்சென்ட், மோகன், கண்ணன், ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai