சுடச்சுட

  

  நாகர்கோவிலில் கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

  கன்னியாகுமரி மாவட்ட தமிழ் நல எழுத்தாளர் சங்கம் சார்பில் புலவர் ப. மாதேவன் பிள்ளை எழுதிய ஒரு கோட்டை கதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தமிழ் நல எழுத்தாளர் சங்கத் தலைவர் தியாகி கோ. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். புலவர் மணி, என்.ஏ.வேலாயுதம், புலவர் அ. ஜெகதீசன், தமிழறிஞர் சி.பா.ஐயப்பன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலைய அலுவலர் ஆ.சண்முகய்யா "ஒரு கோட்டை கதைகள்' நூலை வெளியிட, எஸ். பாலகணேசன், புலவர் வே.ராமசாமி, டாக்டர் கு. சிதம்பரநடராஜன் பெற்றுக் கொண்டனர்.

  ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பத்மபநாபன் ஆய்வுரை நிகழ்த்தினார். கல்லூரி முன்னாள் முதல்வர் கா. ஆபத்துக் காத்தபிள்ளை, கவிமணி நற்பணி மன்றச் செயலர் சிவதாணு, கவிஞர் ராமநாதன், பா.பிதலீஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai