சுடச்சுட

    

    பூதப்பாண்டி அருகே2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் கைது

    By நாகர்கோவில்,  |   Published on : 06th October 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூதப்பாண்டி அருகே வேனில் கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு சந்திப்பில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு வேனை போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 2 டன் ரேஷன் அரிசியை வேனில் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியுடன், வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வேன் ஓட்டுநரான படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த விஜியை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நாகர்கோவிலில் உள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஓட்டுநர் ஒப்படைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai