சுடச்சுட

  

  பேச்சிப்பாறை காந்தி நகர் குடியிருப்பில் 102 குடியிருப்புவாசிகளுக்கு மீண்டும் பட்டா வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்

  By குலசேகரம்  |   Published on : 06th October 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமரி மாவட்டம் பேச்சிப்பாறை காந்தி நகர் குடியிருப்பில் குடியிருப்பு பட்டா ரத்து செய்யப்பட்ட மக்களுக்கு மீண்டும் குடியிருப்பு பட்டா வழங்க வேண்டுமென கம்பம் லாசர் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

  பேச்சிப்பாறை காந்திநகர் குடியிருப்பில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த 102 குடியிருப்பு வாசிகளின் வீட்டுமனைப் பட்டா கடந்த சில மாதங்களுக்கு முன் பத்மநாபபுரம் கோட்டாட்சியரால் ரத்து செய்யப்பட்டது.

  இந்நிலையில், பட்டா ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகளை ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவருமான ஏ. லாசர் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேச்சிப்பாறை காந்தி நகர் குடியிருப்பில் நீண்டகாலமாக வசித்து வந்த 102 குடியிருப்புவாசிகளின் வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  இது அரசின் தற்போதைய விதிகளுக்கு புறம்பானது. எனவே பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு மீண்டும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மலைவிளை பாசி, எம். வல்சகுமார், பி. நடராஜன், சதீஸ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai