Enable Javscript for better performance
மறைகல்வி மன்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    இசையோடும், உடல் நளினத்தோடும் செய்கைப் பாடல் வழியாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் முளகுமூடு வட்டார மறைகல்வி மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் மணலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    தக்கலை அருகே மணலி அந்தோணியார் கலை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முளகுமூடு வட்டார குருகுல முதல்வர் சகாயதாசு தொடங்கி வைத்தார். வட்டார மறை கல்வி இயக்குநர் ஞானதாஸ் முன்னிலை வகித்தார்.

    மன்றத் தலைவர் ராஜேந்திரன், செயலர் ஜாண் வின்சென்ட்ராஜ், செயலர் ததேயுஸ், துணைச் செயலர் டி.ஷீலா, பொருளாளர் லீமாரோஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில், இசையோடும், உடல் நளினத்தோடும் செய்கைப் பாடல் வழியாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் முளகுமூடு வட்டார மறைகல்வி மன்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 70 மறைகல்வி மன்றங்களைச் சேர்ந்த 324 பேர் பங்கேற்றனர்.

    பயிற்சிக்குப் பின் இவர்கள் முளகுமூடு வட்டாரத்திலுள்ள பங்குகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் பாடலாக வடிவமைத்து அவர்களுக்கு கற்றுக் கொடுப்பர் என்றனர் மறைகல்வி மன்றத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai